×

பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு விண்ணப்ப கட்டண உயர்வை திரும்ப பெற அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்தியா முழுவதும் கல்லூரி பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கான ‘தேசிய தகுதி தேர்வு’ பல்கலைக்கழக மானிய குழுவால் நடத்தப்படுகிறது. இதற்கு அதிகபட்ச கட்டணமே ரூ.1,150 தான். அதைவிட இரு மடங்குக்கும் கூடுதலான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தகுதி தேர்வு எழுதும் மாணவர்களில் பெரும்பான்மையினர் வேலையில்லாதவர்கள். அவர்களுக்கு வருவாய் ஆதாரம் எதுவும் கிடையாது. தமிழ்நாட்டில் மாநில தகுதி தேர்வை ஒன்றரை லட்சம் பேர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களிடமிருந்து கட்டணமாக குறைந்தது ரூ.30 கோடி வசூலிக்கப்படும். தேர்வை நடத்த இவ்வளவு செலவு ஆகாது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமும், தமிழக அரசும் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்.

The post பேராசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு விண்ணப்ப கட்டண உயர்வை திரும்ப பெற அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anbumani ,CHENNAI ,BAMA ,President ,University Grants Committee ,India ,Dinakaran ,
× RELATED வறட்சியால் மா, பப்பாளி பயிர்கள்...