சென்னை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மணப்பெண் ஒப்பனை குறித்த மூன்று நாள் பயிற்சி இன்று முதல் அளிக்கப்படுகிறது. இதுகுறித்து செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் மணப்பெண் ஒப்பனை குறித்த மூன்று நாள் பயிற்சி 26ம் தேதி (இன்று) முதல் 28ம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.இந்த பயிற்சியில் மணப்பெண் ஒப்பனை, ஸ்கின் கேர், ப்ரைம் தி பேஸ், கலர் கரெக்ஷன், பவுண்டேஷனை பயன்படுத்துதல், ஹைலைட் செய்தல், தூள், புருவங்கள் மற்றும் கண் மேக்கப், காண்டூர் மற்றும் ப்ளஷ், செட்டிங் ஸ்ப்ரே, பைனல் டச், சிகை அலங்காரம், சேலை கட்டும் விதங்கள் ஆகியவற்றை விரிவாக விவரிப்பார்கள்பயிற்சியில் ஆர்வமுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட தொழில்முனைவோர் (மகளிர் மட்டும்) குறைந்தபட்ச கல்வி தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
The post தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மணப்பெண் ஒப்பனைக்கு மூன்று நாள் பயிற்சி: இன்று முதல் நடக்கிறது appeared first on Dinakaran.