×
Saravana Stores

கீழக்கரை நகர் பகுதியில் சாலையை சீரமைக்க கோரிக்கை

கீழக்கரை, மார்ச் 26: கீழக்கரை நகரில் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு 10க்கும் மேற்பட்ட பள்ளிகள், 4 கல்லூரிகள் உள்ளன. இதனால் கீழக்கரையில் இருந்து மாயாகுளம், ஏர்வாடி, ராமநாதபுரம் ஆகிய நகர்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக வடக்கு தெரு டிஎஸ்பி அலுவலகம் அமைந்துள்ளது. இது வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
பள்ளி, கல்லூரிகளுக்கு இதுவே பிரதான சாலையாக அமைந்துள்ளது.

டிஎஸ்பி அலுவலகத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வரை 200 மீட்டர் தூரம் தில்லையேந்தல் ஊராட்சி எல்லை அமைந்துள்ளதால் அந்த ஊராட்சி நிர்வாகம் அலட்சிய போக்கில் உள்ளதாக கீழக்கரை மக்கள் கூறுகின்றனர். சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டதால் பள்ளி செல்லும் மாணவ,மாணவிகள், அவசர கால ஆம்புலன்ஸ் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இரவு வேளையில் இரு சக்கர வாகனத்தில் செல்வோரிடம் விபத்து ஏற்படும் நிலை இருந்து வருகிறது.

கீழக்கரை நகராட்சி கவுன்சிலர் முஹமது பாதுஷா கூறுகையில், இச்சாலையை தில்லையேந்தல் ஊராட்சி நிர்வாகம் 1 வாரத்திற்குள் சீரமைத்து தராவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார். இப்பிரச்னை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அப்பகுதி சாலையை விரைவில் சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கீழக்கரை நகர் பகுதியில் சாலையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Keezakarai Nagar ,Keezhakarai ,North Street DSP ,Geezakarai ,Mayakulam ,Airwadi ,Ramanathapuram ,
× RELATED கால்நடையை சாலைகளில் விடும்...