- இடது விங்ஸ் அமோகா
- தில்லி
- ஜவாகர்லால் பல்கலைக்கழக மாணவர்
- பஜாஜ் இளைஞர் நிறுவன
- புது தில்லி
- ஜவாகர்லால் நேரு பல்கலைக்க
- அகில இந்திய மாணவர் அமைப்பு
- பல்கலைக்கழக மாணவர் சங்கம்
- பஜாஜ் இளைஞர் அமைப்பு ABVP
- தின மலர்
புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தில் மாணவர் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் நடந்தது. 4 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நிர்வாகிகள் தேர்தலில் பல்கலைகழக மாணவர் சங்க தலைவராக அகில இந்திய மாணவர் அமைப்பை சேர்ந்த தனஞ்செய் ஏபிவிபி வேட்பாளர் உமேஷ் அஜ்மீராவை 922 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மாணவர் தனஞ்செய் தலித் வகுப்பை சேர்ந்தவர்.
இவரது சொந்த ஊர் பீகார் மாநிலம் கயா. இந்த பல்கலைகழகத்தில் 30 ஆண்டுகளுக்கு பின் தலித் மாணவர் ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணை தலைவர் தேர்தலில் எஸ்எப்ஐ அமைப்பை சேர்ந்த அவிஜித் கோஷ்,பொது செயலாளர் பதவிக்கு பிர்சா அம்பேத்கர் புலே மாணவர் அமைப்பை சேர்ந்த பிரியன்ஷி ஆர்யா இணை செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட முகமது சாஜித்(இடது சாரி) வெற்றி பெற்றார்.
The post டெல்லி ஜவகர்லால் பல்கலைகழக மாணவர் சங்க தேர்தலில் இடது சாரிகள் அமோக வெற்றி: பாஜ இளைஞர் அமைப்பு ஏபிவிபி படுதோல்வி appeared first on Dinakaran.