×

திருவள்ளூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 32,931 பேர் எழுதுகின்றனர்: 138 தேர்வு மையங்களில் நடக்கிறது

 

திருவள்ளூர்: தமிழகத்தில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு கடந்த, 1ம் தேதி தொடங்கி, 22ம் தேதி நிறைவடைந்தது. அதே போல் பிளஸ் 1 பொதுத்தேர்வு இந்த மாதம், 4ம் தேதி தொங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொங்கி, வருகின்ற ஏப்ரல் மாதம், 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில், 16,348 மாணவர்களும், 16,583 மாணவியர்களும் என மொத்தம், 32,931 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

இவர்கள் 138 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். இந்நிலையில் தேர்வு மையங்களில், மாணவர்களுக்கு தேர்வு எழுவதற்காக தேவையான மேஜைகள் அமைத்தும், பதிவெண்கள் எழுதும் பணியில் ஆசிரியர்கள் ஈடுப்பட்டுள்ளனர். உதாரணமாக திருத்தணி ஒன்றியம், கே.ஜி.கண்டிகை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட மையம் உள்பட 138 தேர்வு மையங்களில் 10ம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வு எழுதுவதற்காக அறைகளில் மேஜைகள் அமைத்து பதிவெண்களை எழுதும் பணியில் ஆசிரியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 32,931 பேர் எழுதுகின்றனர்: 138 தேர்வு மையங்களில் நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : Tiruvallur District ,Thiruvallur ,Tamil Nadu ,Tiruvallur ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...