×

மயாமி ஓபன் டென்னிஸ்: ஒசாகாவை வீழ்த்தினார் கரோலின்

மயாமி: அமெரிக்காவில் நடைபெறும் மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா தகுதி பெற்றார். 3வது சுற்றில் ஜப்பான் நட்சத்திரம் நவோமி ஒசாகாவுடன் மோதிய கார்சியா 7-6 (7-4), 7-5 என நேர் செட்களில் கடுமையாகப் போராடி வென்றார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 1 மணி, 48 நிமிடத்துக்கு நீடித்தது.

மற்றொரு 3வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் 6-7 (7-9), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் போராடி செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 2 மணி, 33 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. டேனியலி கோலின்ஸ், எம்மா நவர்ரோ, கோகோ காப், ஜெஸ்ஸிகா பெகுலா (அமெரிக்கா), எகடரினா அலெக்சாண்ட்ரோவா (ரஷ்யா), சொரானா கிர்ஸ்டெயா (ருமேனியா) ஆகியோரும் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

The post மயாமி ஓபன் டென்னிஸ்: ஒசாகாவை வீழ்த்தினார் கரோலின் appeared first on Dinakaran.

Tags : Miami Open Tennis ,Caroline ,Osaka ,Miami ,Caroline Garcia ,Miami Open ,United States ,Garcia ,Naomi Osaka ,Dinakaran ,
× RELATED மியாமி ஓபன் டென்னிஸ்; இத்தாலியின் சின்னர் சாம்பியன்