×

மாமல்லபுரத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள வடமாநிலத்தை சேர்ந்த மக்கள் ஹோலி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடினர். வடமாநிலங்களை சேர்ந்தவர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றாக ஹோலி பண்டிகை திகழ்ந்து வருகிறது. இந்த, பண்டிகையின்போது வண்ண கலர் பொடிகளை ஒருவருக்கொருவர் மாறி, மாறி பூசிக்கொண்டு நடனமாடியும், பாடல்கள் பாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஓட்டல், ரிசார்ட்டுகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் தினக்கூலிகளாக பணியாற்றி வந்த வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்களின் சொந்த ஊருக்கு 3 நாட்களுக்கு முன்பே ரயில் மூலம் சென்று விட்டனர்.
மேலும், மாமல்லபுரத்தில் அடகுகடை, எலக்ட்ரிகல் கடை, பானிபூரி கடை, சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு கடை வைத்துள்ள வட இந்தியர்கள் பலர் வசித்து வருகின்றனர். இவர்கள், ஹோலி பண்டிகையை நேற்று கோலாகலமாக கொண்டாடினர்.

அப்போது, அவர்கள் ஒருவருக்கொருவர் வண்ண கலர் பொடிகளை தூவியும், தண்ணீரில் கலர் பொடிகளை கலந்து ஒருவருக்கொருவர் மேலே ஊற்றிக்கொண்டும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, இந்தி பாடல்கள் பாடி பாரம்பரிய நடனமாடினர். இதில் குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், வயதானவர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்று வண்ண கலர் பொடிகளை பூசிக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

The post மாமல்லபுரத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Holi Festival ,Mamallapuram ,Holi ,northern ,Holi Celebration ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!