×

ரூ.1.21 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

பொன்னேரி: மீஞ்சூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ஆச்சி மசாலா ஏஜென்ட் மற்றும் திமுக பிரமுகரிடம் ரூ.1 லட்சத்து 21,451 பறிமுதல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மீஞ்சூர் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி விஜயகுமார், காவல் உதவி ஆய்வாளர் ஏழுமலை, போலீசார் பிரசாத், கர்ணன், வீடியோகிராபர் தென்னரசு, டிரைவர் கோவிந்தராஜ் ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது, பொன்னேரியில் இருந்து மீஞ்சூர் நோக்கி வந்த வாகனத்தை சோதனை செய்ததில் ரூ.71 ஆயிரத்து 451 பையில் இருந்தது தெரிய வந்தது. அவர் முருகன்(73) ஆச்சி மசாலா ஏஜென்ட் என்பவரிடம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகே வந்த காரை மடக்கி சோதனை செய்ததில் மீஞ்சூர் ஒன்றிய தலைவர் ரவி மற்றும் பூமிநாதன் ஆகிய இருவரிடம் ரூ.50,000 பணம் வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, தேர்தல் பறக்கும்படியினர் பறிமுதல் செய்தனர். பின்னர், பொன்னேரி சப் – கலெக்டர் சாஹே சங்கேத் பல்வந்த் முன்னிலையில் ஒப்படைத்தனர். அப்போது சப்- கலெக்டர் நேர்முக உதவியாளர் சுரேஷ் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post ரூ.1.21 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Ponneri ,Election Flying Squad ,Meenjoor ,Achi Masala ,DMK ,Dinakaran ,
× RELATED போலீஸ் ஆதரவுடன் மீஞ்சூரில் கஞ்சா...