- கும்பல்
- Kummidipoondi
- டி.ஜே கோவிந்தராஜன்
- சட்டமன்ற உறுப்பினர்
- கவரப்பேட்டை
- காங்கிரஸ்
- சசிகாந்த் செந்தில்
- திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
- தின மலர்
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கவரப்பேட்டை பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் பங்கேற்ற அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை பகுதியில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி. ஜெ. கோவிந்தராஜன் தலைமை தாங்கினார்.
மேலும், மாநில மாவட்ட நிர்வாகிகள் முன்னாள் எம்எல்ஏ சிவாஜி, சேகர், அன்புவாணன், பாஸ்கர் சுந்தரம், பகலவன், கதிரவன், உமாமகேஷ்வரி, ரவி, ரமேஷ், முர்த்தி, வெங்கடாஜலபதி, குணசேகரன், ஒன்றிய செயலாளர் ஆனந்தகுமார், மணிபாலன், பூண்டி சந்திரசேகர், சக்திவேல், ஜெகதீசன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சிதம்பரம், சம்பத், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், முஸ்லிம் லீக் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன் சிறப்படையாற்றினார்.
இதைத்தொடர்ந்து திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் கலந்து கொண்டு பேசுகையில், அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடன் கை சின்னத்தில் வாக்குசேகரிக்க அயராது உழைக்க வேண்டும். திமுக தலைவர் சிறப்பாக தமிழகத்தை வழிநடத்தி செல்கிறார். அவர் வழியில் நாம் சென்று வலு சேர்க்கும் வகையில் பாடுபட வேண்டும் என பேசினார். இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேட்டியளித்தபோது கூறியதாவது, மோடி தினந்தோறும் ஊடகங்களுக்கு 400 உறுப்பினர், 415 உறுப்பினர் என போலியான நம்பரை விளம்பரத்திற்காக பேசி வருகிறார்.
அதேபோல் எலக்ட்ரானிக்ஸ் ஓட்டுப்பதிவு முக்கியமாக இவிஎம் கவுண்டிங் மிஷின் இதுவரை ஒரு நிலையற்ற தன்மை கொண்டதில்லை. எலக்ட்ரானிக்ஸ் டிவைஸ் மூலம் ஓட்டுகளை மாற்றுவதற்கான வழி உள்ளது. திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் அனைத்துக் கட்சி பிரமுகர்களின் ஒத்துழைப்போடு வாக்கு சேகரிக்க தொடர்ந்து ஈடுபடுவேன். பொதுமக்களும் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எனக்கு கை சின்னத்திற்கு வாக்களிக்க தயாராக உள்ளனர் என கூறினார்.
The post கும்மிடிப்பூண்டி அருகே காங். வேட்பாளரை ஆதரித்து அனைத்து கட்சி கூட்டம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.