×

ஸ்ரீ துர்காதேவி பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா, விளையாட்டு விழா

திருவள்ளூர்: சென்னை அடுத்த கவரைப்பேட்டை, ஸ்ரீதுர்காதேவி பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஆர்எம்கே கல்விக் குழுமங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் தலைமை வகித்தார். இயக்குனர் ஆர்.ஜோதி, நாயுடு துணைத் தலைவர் ஆர்.எம்.கிஷோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேசிக் இன்ஜினியரிங் துறைத் தலைவர் ஜி.ராமகிருஷ்ண சீனிவாசன் வரவேற்புரை ஆற்றினார். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறைத் தலைவர் கே.மேகநாதன் ஆண்டறிக்கையை வாசித்தார். இந்த விழாவில் நகைச்சுவை நாவலர் எஸ்.மோகனசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழா பேருரை ஆற்றினார். பிறகு கல்லூரி இலக்கியப் போட்டிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

மேலும் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளையும் வழங்கினார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், கல்விக் குழும ஆலோசகருமான எம்.எஸ்.பழனிச்சாமி, குழும ஆலோசகர் வி.மனோகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் துறைத் தலைவர் சிவஆதித்தியன் நன்றி கூறினார்.

The post ஸ்ரீ துர்காதேவி பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா, விளையாட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Sri Durga Devi Polytechnic College Annual Festival, Sports Festival ,Tiruvallur ,Sridurgadevi ,Polytechnic ,College ,Kavarippet, Chennai ,RS ,Munirathanam ,RMK Educational Groups ,R. Jyoti ,Naidu ,Vice President ,RM Kishore ,Sri Durgadevi Polytechnic College Annual Festival, Sports Festival ,
× RELATED கலெக்டர் தலைமையில் கள்ளச்சாராய ஒழிப்பு குறித்து ஆலோசனை கூட்டம்