×

கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு நீர்தேக்கத்தில் வாலிபர் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கண்ணன்கோட்டை நீர்த்தேக்கத்தில் தண்ணீரில் மூழ்கி மாயமான வாலிபர் சடலமாக மீட்கப்பட்டார். கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித்(23). இவர் தேர்வாய் கண்டிகை சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை கேன்டீனில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம், இவர் நண்பர்களுடன் கண்ணன்கோட்டை – தேர்வாய் கண்டிகை நீர்தேக்கத்தில் குளிக்க சென்றார்.

மதிய நேரத்தில், இவரது நண்பர்கள் அனைவரும் நீர்தேக்க பகுதியில் பிரியாணி சமைத்து சாப்பிட்டு, நீர்தேக்கம் நிரம்பி வழியும் இடத்தில், தண்ணீரில் குதித்து குளித்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில், இந்த நீர்தேக்கத்தில் அஜித் மூழ்கி மாயமானார். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த தேர்வாய் கண்டிகை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், மாயமான அஜித்தை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை அதே நீர்தேக்க பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு நீர்தேக்கத்தில் வாலிபர் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Kannankottai reservoir ,Ajith ,Palavakkam village ,Chipkot ,Kandikai district ,Dinakaran ,
× RELATED கும்மிடிப்பூண்டி சிப்காட்...