×

கெஜ்ரிவாலின் பழைய போனில் இருந்து மதுபான ஊழல் தொடர்பான பதிவுகள் இருந்ததாகக் கூறும் விசாரணை அதிகாரிகளின் கூற்றுக்கு ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்பு

புதுடெல்லி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பழைய போனில் இருந்து மதுபான ஊழல் தொடர்பான பதிவுகள் இருந்ததாகக் கூறப்படும் விசாரணை அதிகாரிகளின் கூற்றுக்கு டெல்லி ஆளும் ஆம் ஆத்மி கட்சி இன்று கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வழக்கை விசாரித்து வரும் அமலாக்க இயக்குனரகம், இந்த வழக்கில் சாட்சியங்களை அகற்றுவதற்கு முன்பு 170 போன்கள் சாட்சிகளால் அப்புறப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. “பாஜக அலுவலகத்தில் இருந்து விசாரணை நடத்தப்படுகிறது. அமலாக்க இயக்குனரகம், பாஜகவின் அரசியல் பங்காளி” என்று ஆம் ஆத்மி விமர்சனம் செய்துள்ளது.

இன்று காலை, டெல்லி அமைச்சர் அதிஷி, அமலாக்க இயக்குநரகம் ஒரு “சுயாதீன விசாரணை நிறுவனம்” என்று கூறினார். அமலாக்கத்துறை ஏதாவது கூறினால், அவர்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிபதியின் முன் சொல்ல வேண்டும்,” எனவும் அவர் கூறினார்.

மேலும் “நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டம் உங்களுக்கு சில அதிகாரங்களை வழங்கியுள்ளன என்பதை அமலாக்கத்துறையின் அனைத்து அதிகாரிகளுக்கும் நான் கூற விரும்புகிறேன். இந்த அரசியலமைப்பை மீறாதீர்கள். அரசியலமைப்பைக் கொல்லாதீர்கள். நீங்கள் பாரதிய ஜனதாவின் துணை அமைப்பு அல்ல. நீங்கள் இந்த நாட்டின் சட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சுயாதீன விசாரணை நிறுவனம்,” என்று அவர் மேலும் கூறினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மதுபான ஊழல் நடந்ததாகக் கூறப்படும் போது, கெஜ்ரிவால் பயன்படுத்திய தொலைபேசி காணவில்லை என்று ஏஜென்சி வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. இதுபற்றிக் கேட்டபோது, அது எங்கிருக்கிறது என்று தெரியவில்லை என்று கெஜ்ரிவால் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post கெஜ்ரிவாலின் பழைய போனில் இருந்து மதுபான ஊழல் தொடர்பான பதிவுகள் இருந்ததாகக் கூறும் விசாரணை அதிகாரிகளின் கூற்றுக்கு ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Aam Aadmi Party ,Kejriwal ,New Delhi ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Enforcement Directorate ,Dinakaran ,
× RELATED ஆம்ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லியில் கெஜ்ரிவால் மனைவி பிரசாரம்