×

படகு அல்லது பாய்மர படகு சின்னம் கேட்கும் சீமான்.. நாளை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய உள்ளதாக தகவல்..!!

சென்னை: நாம் தமிழர் கட்சிக்கு படகு அல்லது பாய்மர படகு சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது. தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் சீமான் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மேல்முறையீட்டு மனுவுக்கு ஏப்ரல் 1ம் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் உத்தரவிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து, பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து அறிவித்தது.

இந்நிலையில், தங்களுக்கு வேறு சின்னம் ஒதுக்கி தரும்படி நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. மைக் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் படகு அல்லது பாய்மரப் படகு சின்னத்தை நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் கேட்டுள்ளார். நாம் தமிழர் கட்சிக்கு எந்த சின்னத்தை ஒதுக்குவது என்பது குறித்து நாளை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

The post படகு அல்லது பாய்மர படகு சின்னம் கேட்கும் சீமான்.. நாளை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய உள்ளதாக தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : Seaman ,Election Commission ,Chennai ,Tamil Party ,Lok Sabha ,party ,Tamil Nadu ,Puducherry ,
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...