- திமுக
- ஆதிமுகா
- வட்சென்னா
- உடகஜா ஆதிமுக
- சென்னை
- திமுகா
- ஆதமுக-வினார்
- வட்செனாய்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- புதுச்சேரி
- ஆதிமுகா ஆர்குமான்
- உதகய ஆதிமுக
சென்னை: வடசென்னை தொகுதியில் வேட்புமனு தாக்கலின்போது திமுக, அதிமுக-வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 27ம் தேதி கடைசி நாள் ஆகும். வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 3 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். இதனால் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊர்வலத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வடசென்னையில் வேட்புமனு தாக்கலின்போது திமுக, அதிமுக-வினர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. வடசென்னை தொகுதியில் வேட்புமனு தாக்கலின்போது திமுக, அதிமுக-வினர் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி வேட்புமனு தாக்கல் செய்ய 2-ம் எண் டோக்கன் வழங்கப்பட்டிருந்தது.
அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவுக்கு 7-ம் எண் டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. இருவரும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் யார் முதலில் தாக்கல் செய்வது என்பது தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டது. டோக்கன் வரிசைப்படி வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கும்படி அமைச்சர் சேகர்பாபு வலியுறுத்தினார். முதலில் வந்த அதிமுக வேட்பாளரை மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் பரபரப்பு நிலவியது.
அதேபோல உதகையில் அதிமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் வேட்பு மனு ஊர்வலத்தின் போது எஸ்.பி. வாகனத்தை அதிமுகவினர் தாக்கினர். பாஜகவினர் ஊர்வலம் சென்றதால் சற்றுநேரம் கழித்து செல்லுமாறு போலீசார் அதிமுகவினரிடம் கூறியுள்ளனர். தடுப்புகளை உடைத்துக் கொண்டு செல்ல முயன்றவர்களை தடுத்ததால் அதிமுகவினருக்கும் போலீசாருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
The post வடசென்னையில் வேட்புமனு தாக்கலின்போது திமுக, அதிமுக வாக்குவாதம்: உதகையில் அதிமுக – போலீஸ் இடையே தள்ளுமுள்ளு appeared first on Dinakaran.