×
Saravana Stores

தர்மபுரி மாவட்டத்தில் கொண்டைக்கடலை அறுவடை பணி தீவிரம்

அரூர் : தர்மபுரி மாவட்டத்தில், பனிக்கடலை என்றழைக்கப்படும் கொண்டைக்கடலை அறுவடை பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.தர்மபுரி மாவட்டத்தில் பனிக்கடலை எனப்படும் கொண்ைடக்கடலை, தர்மபுரி, நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, கம்பைநல்லூர், மொரப்பூர், பொம்மிடி, கடத்தூர், புட்டிரெட்டிப்பட்டி, ராமதாஸ் தண்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தனி பயிராகவும், ஊடு பயிராகவும் பயிரிட்டுள்ளனர்.

3 மாத பயிரான கொண்டைக்கடலை, பனி காலத்தில் கிடைக்க கூடிய நீராதாரத்தின் மூலமே நன்கு செழித்து வளரும். 5 கிலோ விதைக்கு 100 கிலோ விளைச்சல் கிடைக்கும். தனியாக பயிரிட ஏக்கருக்கு 30 கிலோ விதை தேவைப்படும். கொண்டைக்கடலையை அவித்து சுண்டலாகவும், குழம்பாகவும் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். தற்போது, தர்மபுரி மாவட்டத்தில் கொண்டக்கடலை அறுவடை முழுவீச்சில் நடைபெற்ற வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கொண்டைக்கடலை பயிருக்கு பாராமரிப்பு செலவு குறைவு. லாபம் அதிகம் என்றாலும் அறுவடை செய்ய போதுமான ஆட்கள் கிடைக்காமல் அவதிப்பட நேரிடுகிறது. புன்செய் பயிராகவும் பயிரிடப்படுவதால் பனி ஈரம் காயும் முன்பே பிடுங்க வேண்டும். ஆனால், கூலிக்கு ஆட்கள் வருவதில்லை,’ என்றனர்.

The post தர்மபுரி மாவட்டத்தில் கொண்டைக்கடலை அறுவடை பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri district ,Dharmapuri ,Nallampalli ,Paprirettipatti ,Campinallur ,Morapur ,Pommidi ,Kaduur ,Putirettipatti ,Ramdas Thanda ,
× RELATED கட்டிட தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி