- திருவெண்ணெய்நல்லூர்
- ராகவன் கால்வாய் திருவெண்ணெய்நல்லூர்
- ராகவன் கால்வாய்
- விழுப்புரம் மாவட்டம்
- தென்பெண்ணை ஆறு
- திருவேணைநல்லூர்
*ராகவன் கால்வாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை
திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் அருகே கோடை காலத்திலும் நெற்பயிர் நீரில் மூழ்கியதால் ராகவன் கால்வாயை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தென்பெண்ணை ஆற்றிலிருந்து பிரிந்து ராகவன் கால்வாய் வழியாக விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள புதுப்பாளையம், இளந்துறை, மனக்குப்பம், அண்ராயநல்லூர், சின்னசெவலை, பெரியசெவலை, திருவெண்ணெய்நல்லூர், சரவணம்பாக்கம், கொத்தனூர், கூவாகம், ஆணைவாரி, கொரட்டூர், மாதம்பட்டு, இருந்தை, குச்சிப்பாளையம், மடப்பட்டு, கருவேப்பிலைபாளையம் உள்ளிட்ட கிராமங்களின் வழியாக பாய்ந்து சென்று பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நீர்பாசன வசதி பெற்று விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது சம்பா அறுவடை முடிந்து தாளடி என்று சொல்லப்படுகின்ற இரண்டாவது போகத்தில் விவசாயிகள் நெற்பயிர் நடவு செய்துள்ளனர். இந்நிலையில் ராகவன் வாய்க்கால் தூர்ந்துபோய் உள்ளதால் போதிய வடிநீர் செயல்பாடு குறைவாக இருக்கின்றது.
இதனால் பெரியசெவலை கிராமத்தில் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது. எனவே, இவற்றை மாவட்ட நிர்வாகமும், நீர்வளத்துறை அதிகாரிகளும் கவனத்தில் கொண்டு தூர்ந்து போன ராகவன் கால்வாயை தூர்வாரி இரு கரைகளையும் உயர்த்தி பலமாகக் கட்டி மண் அணைக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post திருவெண்ணெய்நல்லூர் அருகே கோடை காலத்திலும் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் appeared first on Dinakaran.