×

புறா முட்டை எடுக்க சென்று கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்

*தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

மேல்மலையனூர் : விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த வேட்டைக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரது மூத்த மகன் லோகேஷ் (13) தனது வீட்டுக்கு அருகில் உள்ள சாம்ராஜ் என்பவரின் கிணற்றில் புறா முட்டை எடுக்க விவசாய கிணற்று பைப் வழியாக இறங்கியபோது தவறி கிணற்றுக்குள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கிணற்றுக்குள் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக தவித்த சிறுவனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் சிறுவனை ஏணியின் மூலம் மீட்டனர். புறா முட்டை எடுக்க சென்று கிணற்றுக்குள் தவறி விழுந்து இரண்டு மணி நேரம் வெளியே வர முடியாமல் தவித்த சிறுவனை தீயணைப்பு வீரர்கள் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post புறா முட்டை எடுக்க சென்று கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் appeared first on Dinakaran.

Tags : Melamalayanur ,Suresh ,Lokesh ,Vedettakaranpatti ,Melmalayanur ,Villupuram district ,Samraj ,
× RELATED Indian 2 Audio Launch - Full Video | Kamal Haasan, Simbu, Lokesh Kanagaraj, Anirudh, Nelson, Shankar