×

பம்பரம் சின்னம் கேட்டு மதிமுக அவசர முறையீடு.. நாளை விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு..!!

சென்னை: பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதிமுக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவசர வழக்கு தொடர்ந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் ம.தி.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ம.தி.மு.க. அளித்த விண்ணப்பம் மீது இரண்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் மார்ச் 7ல் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் மதிமுகவிற்கு சின்னம் ஒதுக்குவது தொடர்பாக ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மதிமுகவிற்கு சின்னம் ஒதுக்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 3 நாட்களே உள்ளது; இன்னும் தங்களது கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த மனுவை நாளை விசாரிப்பதாக தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.

The post பம்பரம் சின்னம் கேட்டு மதிமுக அவசர முறையீடு.. நாளை விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Chennai ,MDMK ,general secretary ,Vaiko ,Election Commission ,Madhyamik High Court ,Madhya Pradesh ,
× RELATED எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும்...