- குருத்தோலை பவானி
- தூத்துக்குடி மாவட்டம்
- தூத்துக்குடி
- குருத்தோலை
- பன்மய மாதா பரலயா
- பங்கபட் குமார்ராஜா
- தூத்துக்குடி திரு காரியட கோவில்
- பிஷப்
- ஸ்டீபன் ஆண்டனி
- கிரிஸ்துவர்
- பவானி
- தின மலர்
தூத்துக்குடி : குருத்தோலை ஞாயிறையொட்டி தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் பங்குதந்தை குமார்ராஜா தலைமையில் குருத்தோலை பவனி நடந்தது. இதேபோல் தூத்துக்குடி திரு இருதய ஆலயத்தில் ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் குருத்தோலை பவனி நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு குருத்தோலைகளை ஏந்திக்கொண்டு ஓசன்னா பாடலை பாடியபடி பவனியாக சென்றனர்.
நாசரேத்: குருத்தோலை ஞாயிறையொட்டி நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் குருத்தோலை பவனி நடந்தது. தலைமைகுரு ஹென்றி ஜீவானந்தம் தலைமை வகித்து ஜெபித்து பவனியை துவக்கி வைத்தார். உதவிகுரு பொன்செல்வின் அசோக்குமார், சபை ஊழியர்கள் ஜெபராஜ் சாமுவேல், ஜெசு மற்றும் பாடகர் பாடகர் குழுவினர், சபையார் குருத்தோலைகளை பிடித்துக்கொண்டு ஓசன்னா பாடிக் கொண்டு ஊர்வலமாக சென்றனர். இதையடுத்து ஆலயத்தில் பரிசுத்த நற்கருணை ஆராதனை நடந்தது. நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத்தில் குருத்தோலை பவனி பங்குத்தந்தை சலேட் ஜெரால்ட் தலைமையில் நடந்தது. இதையடுத்து ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி நடந்தது.
நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலயத்தில் நடந்த பவனிக்கு சேகர தலைவர் நவராஜ் தலைமை வகித்து ஜெபித்து தொடங்கி வைத்தார். சபை ஊழியர் ஸ்டான்லி, ஆலய பாடகர் குழு பொறுப்பாளர் இம்மானுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாடகர் குழுவினர் மற்றும் சபையார் குருத்தோலைகளை பிடித்துக்கொண்டு ஊரைச்சுற்றி ஓசன்னா பாடிக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு ஆராதனை நடந்தது.
நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு ஆலயத்தில் குருத்தோலை பவனி சேகர தலைவர் ஞானசிங் எட்வின் தலைமையில் தூய மாற்கு ஆலய பரிபாலன கமிட்டி தலைவர் சாமுவேல் முன்னிலையில் நடந்தது. இதில் சபை ஊழியர் ஜெனோ, பாடகர் குழு பொறுப்பாளர் ஜெயபால் மற்றும் பாடகர் குழுவினர், சபையார் கலந்து கொண்டனர். இதையடுத்து ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு ஆராதனை நடந்தது.
மேலும் வகுத்தான்குப்பம், மணி நகர், வாழையடி, வெள்ளமடம், கடையனோடை, தங்கையாபுரம், ஒய்யான்குடி, பாட்டக்கரை, கச்சனாவிளை, நெய்விளை, நாலுமாவடி, வெள்ளமடம், முதலைமொழி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி நடந்தது.கோவில்பட்டி: குருத்தோலை ஞாயிறையொட்டி கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்திற்கு தூய பவுலின் ஆலய குருவானவர்களும் இறை மக்களும் வந்தனர்.
இரு சபை அருட்தந்தையர்களும் குருத்தோலைகளை மந்திரித்து இறைமக்களுக்கு வழங்கினர். பின்னர் இறை மக்கள் புனித சூசையப்பர் திருத்தல பங்குத்தந்தை சார்லஸ் அடிகளார், உதவி பங்குத்தந்தை அந்தோணி ராஜ் அடிகளார், தூய பவுலின் (சிஎஸ்ஐ) ஆலய முதன்மை குருவும் ராகலன்ட் கவுன்சில் சேர்மனுமான சாமுவேல் அடிகளார், உதவி குரு எப்ராயீம் ராஜ் அடிகளார் ஆகியோர் தலைமையில் இறை மக்கள் கையில் குருத்தோலை ஏந்தியவாறு ஓசன்னா கீதம் பாடியபடி பவனியாக வந்தனர். புதுரோடு, கடலையூர் மெயின் ரோடு, மில் தெரு, சாத்தூர் மெயின் ரோடு வழியாக தூய பவுலின் ஆலயம் வந்து சேர்ந்தனர். அங்கு இரு சபை அருட்தந்தையர்களும் இறை பிரசங்கம் செய்தனர். பின்னர் புனித சூசையப்பர் திருத்தல இறை மக்கள் ஆலயம் வந்தனர். அங்கு அருட்தந்தையர்கள் திருப்பலி நிறைவேற்றினர்.
இதில் ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டனர்.குளத்தூர்: தருவைகுளம் புனிதமிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடந்தது. முன்னதாக காலை 5.30மணிக்கு புனித நீக்கொலாசியார் ஆலயத்தில் குருத்தோலைகளை வைத்து பங்குதந்தை வின்சென்ட் ஜெபம் செய்து குருத்தோலை ஊர்வலத்தை துவக்கிவைத்தார். தொடர்ந்து தருவைகுளம் முக்கிய வீதிகளில் ஓசன்னா பாடியவாறு ஊர்வலம் சென்று இறுதியாக புனிதமிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் நிறைவடைந்தது.
இதையடுத்து கயத்தாறு பங்குதந்தை லூயிஸ், உதவிபங்குதந்தை சஜன் ஆகியோர் குருத்தோலை திருப்பலி, மறையுரை, ஆராதனை வழங்கினர். தொடர்ந்து மாலை 4மணிவரை தவக்கால தியானம் நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் குளத்தூர் கிறிஸ்து மறுரூப ஆலயத்தில் சேகரகுருவானர் ஒபதியா தலைமையில் குருத்தோலை ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் முக்கியவீதிகள் வழியாக ஆலயத்தில் நிறைவடைந்தது.
The post தூத்துக்குடி மாவட்டத்தில் குருத்தோலை பவனி appeared first on Dinakaran.