×

தூத்துக்குடிக்கு உங்கள் அன்பை தேடி மீண்டும் வந்திருக்கிறேன்

*பிரசாரத்தில் கனிமொழி எம்பி உருக்கம்

தூத்துக்குடி : 5 ஆண்டு காலம் உங்களுக்காக பணியாற்றி மீண்டும் உங்கள் ஆதரவை, அன்பை தேடி வந்திருக்கிறேன் என்று தூத்துக்குடி தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்பி உருக்கமாக பேசினார். தூத்துக்குடி மக்களவை தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் பிரசார பயணத்தை தொடங்கினார். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகித்தார்.

மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கரும்பன், வி.சி.க. மாவட்ட செயலாளர் கணேசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, மக்கள் நீதிமய்யம் மாவட்டச்செயலாளர் ஜவஹர், மனிதநேய மக்கள் கட்சி தொகுதி பொறுப்பாளர் அகமதுஇக்பால், சமத்துவ மக்கள் கழக மாவட்டச் செயலாளர் அற்புதராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் கிதர்பிஸ்மி, ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் முருகேசன், ஆதித்தமிழர் கட்சி மாவட்டச்செயலாளர் நம்பிராஜ்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் வரவேற்றார்.

பின்னர் தூத்துக்குடி கலைஞர் அரங்கம் முன்புள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தனது பிரசாரத்தை தொடங்கிய கனிமொழி எம்பி பேசியதாவது:
தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்கு மறுபடியும் முதலமைச்சர் எனக்கு வாய்ப்பளித்துள்ளார். 5 ஆண்டு காலம் உங்களோடு இருந்து பணியாற்றியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. மீண்டும் உங்கள் ஆதரவை தேடி அன்பை தேடி வந்திருக்கிறேன். அது மீண்டும் கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் உள்பட தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும். 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தொகுதியில் நான் போட்டியிட வந்த போது பலர் என்னை பார்க்க முடியாது.

இந்த தொகுதிக்கு பணியாற்றுவாரா என்று எல்லோரும் எண்ணிய நேரத்தில், நான் 5 ஆண்டு காலம் மக்கள் பணியாற்றியுள்ளேன். எனக்கு தூத்துக்குடி இன்னொரு தாய் வீடாக தான் பார்த்து பணியாற்றுகிறேன். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் சிலிண்டர் விலை 500க்கும், பெட்ரோல் விலை 75க்கும், டீசல் விலை 65க்கும் வழங்கப்படும். மோடி ஆட்சியில் தமிழகத்திற்கு எந்த திட்டமுமே நடைபெறவில்லை. இனியும் பாஜ ஆட்சி நீடிக்க கூடாது. அதை அகற்ற வேண்டிய கால கட்டாயத்தில் எல்லோரும் இருக்கிறோம். திமுக ஆட்சியின் சாதனைகளை இல்லந்தோறும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

ஒன்றிய அரசின் வேதனைகளையும் சொல்ல வேண்டும். கேஸ் விலை உயர்ந்துவிட்டது, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அதனால் பல பொருட்களின் விலைவாசி உயர்வு இதையெல்லாம் கருத்தில் கொண்டு திமுக தேர்தல் அறிக்கையில் கேஸ் விலை 500ம், பெட்ரோல் விலை 75ம், டீசல் விலை 65க்கும் இந்தியா கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றதும் வழங்குவோம். மகளிர்களுக்கு அதிக திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் கல்விக்கு ஆயிரம், இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத்தொகை, தமிழகத்தில் ஒரு கோடியே 16 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து அவர், மாரியம்மன் கோயில், டிஎம்சிகாலனி ஜங்ஷன், அமெரிக்கன் ஆஸ்பத்திரி ஜங்ஷன், பூபாலராயர்புரம், திரேஸ்புரம், புதுத்தெரு, மட்டக்கடை, 2ம்கேட், சிவன்கோயில்தேரடி, பள்ளிவாசல், பீங்கான்ஆபீஸ், சிதம்பரநகர், பிரையண்ட்நகர், பழைய பேருந்து நிலையம், அண்ணாநகர் உள்பட 24 இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தில் மேயர் ஜெகன்பெரியசாமி, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் சண்முகம், முன்னாள் எம்எல்ஏக்கள் சுடலையாண்டி, டேனியல்ராஜ், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அர்ஜுனர், துணைமேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன்செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், பிரமிளா, கனகராஜ், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், ராஜா, தூத்துக்குடி தொகுதி பொறுப்பாளர் பெருமாள், மாவட்ட அணி அமைப்பாளார்கள் மதியழகன்,

அந்தோணிஸ்டாலின், அன்பழகன், ரமேஷ், குபேர்இளம்பரிதி, சீனிவாசன், கவிதாதேவி, அபிராமிநாதன், அசோக், ஜெயசிங், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் பெனில்டஸ், அருணாதேவி, ராபின், சின்னத்துரை, பிரபு, அந்தோணிகண்ணன், ராமர், நாகராஜ், பார்வதி, நிக்கோலாஸ் மணி, ஜேசையா, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்சுந்தர், ரூபஸ்அமிர்தராஜ், முருகஇசக்கி, ஜெயக்கனி, பரமசிவம், டேனி, துணை அமைப்பாளர்கள் ரவி, சங்கரநாராயணன், பால்ராஜ், சீதாராமன், முத்துராமன், குமரன், செல்வின், சீதாலட்சுமி, சாகுல்அமீது,

வடக்கு மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், தொமுச நிர்வாகிகள் மரியதாஸ், முருகன், கருப்பசாமி, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமார், சேர்மபாண்டியன், சக்திவேல், சுரேஸ் கவுன்சிலர்கள் சந்திரபோஸ், சரவணக்குமார், இசக்கிராஜா, பொன்னப்பன், கண்ணன், ஜான்சிராணி, சுதா, ஜெயசீலி, சுப்புலட்சுமி, விஜயலட்சுமி, சரண்யா, தனலட்சுமி, முத்துமாரி, எடின்டா, கற்பகக்கனி, ரெக்ஸ்லின், பவாணி, வைதேகி, மரியகீதா, ஜாக்குலின்ஜெயா, பேபிஏஞ்சலின், அதிர்ஷ்டமணி, கந்தசாமி, சோமசுந்தரி, அரசு வழக்கறிஞர்கள் மோகன்தாஸ்சாமுவேல், சுபேந்திரன், ஆனந்தகபரியேல்ராஜ், மாலாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தூத்துக்குடிக்கு உங்கள் அன்பை தேடி மீண்டும் வந்திருக்கிறேன் appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Kanimozhi MP ,Urukkam ,Thoothukudi ,Kanimozhi ,Thoothukudi Lok Sabha Constituency India Alliance ,
× RELATED கோடைவெயில் தாக்கம் எதிரொலி...