×

போடியில் துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு

போடி, மார்ச் 25: போடியில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு துணை ராணுவ படையினரின் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு நடத்திவருகின்றனர்.

அதன்படி போடி டிஎஸ்பி பெரியசாமி தலைமையில் துணை ராணுவத்தினர் மற்றும் தேனி மாவட்ட போலீசார் இணைந்து பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில் போடி நகராட்சி கட்ட பொம்மன் சிலை அருகில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

அங்கிருந்து துவங்கிய அணி வகுப்பு கீழதெரு, போஜன் பார்க், சர்ச் தெரு பழைய பஸ் நிலையம், வஉசி சிலை, பெரியாண்டவர் ஹைரோடு வழியாக தேவர் சிலையில் திரும்பி காமராஜர் சாலை வள்ளுவர் சிலை கடந்து கட்டபொம்மன் சிலை பகுதியில் நிறைவடைந்தது.

The post போடியில் துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு appeared first on Dinakaran.

Tags : Flag parade of paramilitaries ,Bodhi ,Bodi ,Theni district ,DSP ,Troops Flag Parade ,Dinakaran ,
× RELATED வாலிபருக்கு அரிவாள் வெட்டு