×

ஏரியூரில் மாட்டுவண்டி பந்தயம் 48 வண்டிகள் பங்கேற்பு

 

சிங்கம்புணரி, மார்ச் 25: சிங்கம்புணரி அருகே ஏரியூர் மலைமருந்தீஸ்வரர், தண்டாயுதபாணி கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. ஏரியூர் சிவகங்கை சாலையில் நடைபெற்ற இப்போட்டியில் நடு மாடு, பூஞ்சிட்டுமாடு என இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. நடுமாடு பிரிவில் 11 ஜோடிகளும், பூஞ்சிட்டு மாடு பிரிவில் 37 ஜோடிகள் கலந்து கொண்டன சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 48 மாட்டுவண்டிகள் பங்கேற்றன.

நடு மாட்டுக்கு 7 மைல் தொலைவும், பூஞ்சிட்டு மாட்டுக்கு 5 மைல் தொலைவும் எல்லைகளாக நிர்ணயம் செய்யப்பட்டு காளைகள் எல்லையை நோக்கி சீறி பாய்ந்து சென்றன. மாட்டுவண்டி போட்டிகளை சாலையின் இருபுறங்களில் நின்று ஏராளமான பார்வையாளர்கள் கண்டுகளித்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் எல்கையில் கொடியை வாங்கி வெற்றி பெற்ற முதல் 5 மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைத்து மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கபட்டது,

The post ஏரியூரில் மாட்டுவண்டி பந்தயம் 48 வண்டிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Eriur ,Singampunari ,Panguni Uthra festival ,Ariyur Malaimaruntheeswarar ,Dandayuthapani Temple ,Sivagangai road ,Ariyur ,Dinakaran ,
× RELATED வாக்குச்சாவடிக்குள் வலிப்பு வந்து...