×

மண்டல அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், பயிற்சி வகுப்பு

 

சிவகங்கை, மார்ச் 25: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மக்களவை பொதுத் தேர்தலையொட்டி மண்டல அலுவலர்கள் மற்றும் அஞ்சல் வாக்குப்பதிவு பணிகள் மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு ஆய்வுக் கூட்டம் மற்றும் புத்தாக்கப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் ஆஷாஅஜித் தலைமை வகித்து பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பாராளுமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளது.

பொது தேர்தலையொட்டி பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் தேர்தல் பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து தேர்தல் ஆணையத்தால் அறிவுரைகள் வழங்கப்பட்டு, அதன்படி அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டத்திற்குட்பட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் தேவையான சந்தேகங்களை கேட்டு அலுவலர்கள் சரி செய்து கொள்ளலாம். இவ்வாறு பேசினார். இப்பயிற்சி வகுப்பில் மண்டல அலுவலர்கள் மற்றும் அஞ்சல் வாக்குப்பதிவு பணிகள் மேற்கொள்ளும் மொத்தம் 120 அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மண்டல அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம், பயிற்சி வகுப்பு appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Zonal Officers ,Lok Sabha General Election ,Sivagangai Collector ,Office ,Collector ,Asha Ajith ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தில் மஞ்சுவிரட்டு: ஐகோர்ட் கிளை அனுமதி