×

பழநியில் முன்விரோத தகராறில் 2 பேர் படுகாயம்

 

பழநி, மார்ச் 25: பழநியில் முன்விரோத தகராறில் 2 பேர் படுகாயமடைந்தனர். பழநி அடிவாரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (34). இவரது நண்பர் பாலசுப்பிரமணி (54). இருவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன் மாலை கொடைக்கானல் பைபாஸ் சாலையில் உள்ள பேக்கரியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், கொடுங்கல்-வாங்கல் தொடர்பாக இருவருடனும் பேசி கொண்டிருந்தார்.

இதில் இருதரப்பிரனருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், திடீரென கல் உள்ளிட்ட ஆயுதங்களால் மணிகண்டன் மற்றும் பாலசுப்பிரமணியை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் மணிகண்டன் மற்றும் பாலசுப்பிரமணி ஆகியோர் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு, பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பழநி அடிவாரம் போலீசார், இருவரையும் தாக்கி விட்டு தப்பியோடிய வாலிபரை தேடி வருகின்றனர்.

The post பழநியில் முன்விரோத தகராறில் 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Palani ,Manikandan ,Palani Adiwara ,Balasubramani ,Dinakaran ,
× RELATED அக்கவுண்டை முடக்கியதால் ஆத்திரம்...