×

மூலக்கடையில் நள்ளிரவு பரபரப்பு ஸ்கிராப் கடையில் தீ விபத்து

 

பெரம்பூர், மார்ச் 25: மாதவரம் ஏ.பி.கார்டன் தபால் பெட்டி பகுதியை சேர்ந்தவர் பாலதண்டாயுதபாணி (50). இவர், மூலக்கடை எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் ஸ்கிராப் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு இவர், கடையை மூடிவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு இவரது கடையில் தீவிபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியுள்ளது. கடை அருகில் உள்ள ட்ரான்ஸ்பார்மரிலும் தீ பிடித்து எரிந்துள்ளது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், வியாசர்பாடி, முல்லைநகர், செம்பியம் ஆகிய 3 இடங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. விரைந்து தீயை அணைத்ததால் அசம்பாவித சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post மூலக்கடையில் நள்ளிரவு பரபரப்பு ஸ்கிராப் கடையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Moolakadai ,Perambur ,Balathandayuthapani ,Madhavaram AP Garden Post Box ,Moolakadai Erukkancheri highway ,Moolakkadi ,Dinakaran ,
× RELATED ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ரயில்வே தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்