×

நைஜீரிய தீவிரவாதிகள் கடத்திய 300 பள்ளி மாணவர்கள் விடுவிப்பு

அபுஜா: நைஜீரியாவில் போக்கோ ஹரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 287 பள்ளி மாணவர்கள் 2 வாரங்களுக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் போக்கோ ஹரம் என்ற தீவிரவாத குழுவினர் கிராமங்களில் புகுந்து அப்பாவி மக்களை கொலை செய்வது போன்ற வன்முறையில் ஈடுபடுகின்றனர். பணத்திற்காக பள்ளி மாணவ,மாணவிகளை கடத்தி சென்று பணய தொகை கேட்டு மிரட்டுவது போன்றவற்றில் ஈடுபடும் கும்பல்களும் உள்ளன.

கடந்த 7ம் தேதி கடுனா மாகாணம், குரிகா கிராமத்தில் பள்ளியில் புகுந்த தீவிரவாதிகள் 287 மாணவர்களை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். மாணவர்களை மீட்கும் முயற்சியில் நைஜியா அரசு ஈடுபட்டு வந்தது. இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் 12 வயது மற்றும் அதற்கும் குறைவான வயதுடையவர்கள். இந்நிலையில் கடத்தப்பட்ட மாணவர்கள் அனைவரும் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

The post நைஜீரிய தீவிரவாதிகள் கடத்திய 300 பள்ளி மாணவர்கள் விடுவிப்பு appeared first on Dinakaran.

Tags : Abuja ,Boko Haram ,Nigeria ,West ,Dinakaran ,
× RELATED சிறைக்குள் வெள்ளம் 100 கைதிகள் தப்பி ஓட்டம்