×

ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் இருக்கைக்கான ஒப்பந்தம் புதுப்பிப்பு

ஹூஸ்டன்: ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியை கற்பிக்கவும், ஆய்வுகள் மேற்கொள்ளவும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்கப்படுகிறது. இதுவரை 5 வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் உள்ளன. அமெரிக்காவில் 3வது பல்கலைக்கழகமாக டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழ் இருக்கை அமைப்பதற்கான ஒப்பந்தம் இந்திய கலாச்சார உறவு கவுன்சில் (ஐசிசிஆர்), ஹூஸ்டன் பல்கலைக்கழகம் இடையே கையெழுத்தானது.

இதைத் தொடர்ந்து, கேரள பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியரான டி.விஜயலட்சுமி வருகைதருப் பேராசிரியராக தேர்வு செய்யப்பட்டார். அவரது பயிற்சியின் கீழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி மற்றும் கலாச்சார பாடத்திட்டம் கடந்த 2 செமஸ்டர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ் இருக்கைக்கான ஒப்பந்தத்தை ஹூஸ்டன் பல்கலைக்கழம் மற்றும் இந்திய கலாச்சார உறவு கவுன்சில் புதுப்பித்துள்ளன. இதன் மூலம் மேலும் ஓராண்டிற்கு ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை தொடர்ந்து செயல்படும்.

The post ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் இருக்கைக்கான ஒப்பந்தம் புதுப்பிப்பு appeared first on Dinakaran.

Tags : University of Houston ,Houston ,US ,Texas ,Dinakaran ,
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!