×

ராயபுரத்தில் வேட்பாளர் கலாநிதி வீராசாமி அறிமுக கூட்டம் 300க்கும் மேற்பட்ட தொகுதியில் இந்தியா கூட்டணி வெற்றிபெறும்: திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பேச்சு

சென்னை: இந்தியா கூட்டணி 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பேசி உள்ளார். இந்தியா கூட்டணி சார்பில் வடசென்னை நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் ராயபுரம் அறிவகம் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, சென்னை வடக்கு மாவட்ட செயலாளரும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.சேகர் தலைமை வகித்தார், ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி, முன்னிலை வகித்தார், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வடசென்னை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை அறிமுகப்படுத்தி பேசியதாவது: ஆளுநரை நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க வைத்த கட்சி தான் திமுக. மீண்டும், பொன்முடிக்கு அமைச்சர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பாஜவிற்கு கைப்பாகையாக ஆளுநர் செயல்படுகிறார்.

திமுக மதச்சார்பற்ற கட்சியாக செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் மூன்றாண்டு சாதனைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளுங்கள். மோடியின் செல்வாக்கு வட மாநிலங்களில் சரிந்து வருகிறது. ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும். 300க்கும் மேற்பட்ட தொகுதியில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்திலேயே வடசென்னை வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள். தமிழகம் பாண்டிச்சேரியில் நாளை நமதே 40க்கு 40 வெற்றி பெறுவோம். இந்தியா கூட்டணியை ஆட்சியில் அமர வைப்போம். இவ்வாறு அவர் பேசினார். பகுதி செயலாளர்கள் செந்தில்குமார், வ.பெ. சுரேஷ், கூட்டணி கட்சிகள் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

The post ராயபுரத்தில் வேட்பாளர் கலாநிதி வீராசாமி அறிமுக கூட்டம் 300க்கும் மேற்பட்ட தொகுதியில் இந்தியா கூட்டணி வெற்றிபெறும்: திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Kalanithi Veeraswamy ,Rayapuram India alliance ,DMK ,RS Bharati ,Chennai ,India Alliance ,North ,Rayapuram Vidhakam Mandapam ,Kalanithi Veerasamy ,DMK Organization ,RS Bharti ,Dinakaran ,
× RELATED திருவொற்றியூர் விம்கோ நகரிலிருந்து...