×

சென்னையில் கடந்தாண்டை விட நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது: ஆய்வில் தகவல்

சென்னை: சென்னையில் கடந்தாண்டை விட ஓரளவு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் நிலத்தடி நீர்மட்டத்தை பற்றி ஆய்வு நடத்தியது. அதில் சென்னையில் தற்போது நிலத்தடி நீர் 4.22 மீட்டர் ஆழத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து நீர்மட்டம் 0.26 மீட்டர் உயர்ந்துள்ளது. அதாவது ஓரளவு அதிகரித்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், அண்ணாநகர், ஆலந்தூர் போன்ற மண்டலங்களில் கடந்த ஓராண்டாக ஒரு மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. மணலி, மாதவரம், அம்பத்தூர் போன்ற இணைக்கப்பட்ட பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. மாநகராட்சியில் சேர்க்கப்பட்ட பகுதிகளில் நீர்மட்டம் கிட்டத்தட்ட 0.20 மீட்டர் குறைந்துள்ளது. அதே நேரத்தில் இந்த மண்டலங்களுடன் சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட மாதவரம் அம்பத்தூர் மணலி உள்ளிட்ட பகுதிகளில் ஓரளவு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள திரு.வி.க. நகர் பகுதியில் 1.74 மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

மேலும் இந்த மண்டலத்தில் உள்ள தேனாம்பேட்டை ராயபுரம் மற்றும் அடையார் பகுதிகளில் ஓரளவு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்டுள்ள பெருங்குடி சோளிங்கநல்லூர் பகுதிகளில் மிக அதிக அளவு நிலத்தில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அதாவது இங்கு 3 மீட்டர் அளவுக்கு அதிகரித்துள்ளது. பொதுவாக வடகிழக்கு பருவமழை காலத்தில் பிறகு சென்னையில் ஜனவரி மாதத்தில் 3.46 மீட்டர் ஆழத்தில் இருக்கும். அது கடந்த மாதத்தில் அதாவது பிப்ரவரியில் 4.22 மீட்டர் ஆழத்தில் இருந்தது. தொடர்ந்து சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் சென்னையில் உள்ள 200 இடங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறது.

 

The post சென்னையில் கடந்தாண்டை விட நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது: ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Metro Water Board ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...