×

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களில் வறண்ட வானிலையே நிலவும்

சென்னை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

“24.03.2024 முதல் 30.03.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: 24.03.2024 முதல் 28.03.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஒரிரு இடங்களில் அசெளகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என தெரிவித்துள்ளது.

The post தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 7 நாட்களில் வறண்ட வானிலையே நிலவும் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Puduwa ,Karaikal ,Chennai ,Puduwai ,Meteorological Centre ,
× RELATED தமிழ்நாட்டில் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு