×

திண்டுக்கல் மாவட்டத்தில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள்; 85 வயதுக்கு மேல் 32,594 பேர் உள்ளனர்: கலெக்டர் தகவல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கும் வகையில் 32,594 வாக்காளர்கள் கண்டறியப்பட்டு 26,508 வாக்காளர்களுக்கு விருப்ப படிவம் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தலில் அனைவரும் வாக்களிக்கும் வகையில் வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 100 சதவீதம் வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு

பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் கொண்ட பட்டியல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு அவர்களின் வீட்டிலிருந்தே வாக்களிக்க விரும்பும் வாக்காளர்களிடமிருந்து விருப்ப படிவம் பெற்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி சட்டமன்ற தொகுதியில் 323 வாக்குச்சாவடிகளில் 85 வயதிற்கு மேற்பட்டவர்களில் 1,727 பேருக்கும், மாற்றுத்திறனாளிகளில் 1,305 பேருக்கும் என மொத்தம் 3,032 நபர்களுக்கும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் 282 வாக்குச்சாவடிகளில் 85 வயதிற்கு மேற்பட்டவர்களில் 2,376 பேருக்கும், மாற்றுத்திறனாளிகளில் 2,592 பேருக்கும் என மொத்தம் 4,968 நபர்களுக்கும், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குச்சாவடிகளில் 85 வயதிற்கு மேற்பட்டவர்களில் 1,996 பேருக்கும், மாற்றுத்திறனாளிகளில் 2,235 பேருக்கும் என மொத்தம் 4,231 நபர்களுக்கும், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 270 வாக்குச்சாவடிகளில் 85 வயதிற்கு மேற்பட்டவர்களில் 1,701 பேருக்கும், மாற்றுத்திறனாளிகளில் 1,943 பேருக்கும் என மொத்தம் 3,644 நபர்களுக்கும், நத்தம் சட்டமன்ற தொகுதியில் 327 வாக்குச்சாவடிகளில் 85 வயதிற்கு மேற்பட்டவர்களில் 1,413 பேருக்கும், மாற்றுத்திறனாளிகளில் 2,069 பேருக்கும் என மொத்தம் 3,482 நபர்களுக்கும், திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 290 வாக்குச்சாவடிகளில் 85 வயதிற்கு மேற்பட்டவர்களில் 1,222 பேருக்கும், மாற்றுத்திறனாளிகளில் 1,070 பேருக்கும், என மொத்தம் 2292 நபர்களுக்கும், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் 309 வாக்குச்சாவடிகளில் 85 வயதிற்கு மேற்பட்டவர்களில் 2,637 பேருக்கும், மாற்றுத்திறனாளிகள் 2,222 பேருக்கும் என மொத்தம் 4,859 நபர்களுக்கு விருப்ப படிவம் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் 85 வயதிற்கு மேற்பட்டவர்களில் 13,072 பேருக்கும், மாற்றுத்திறனாளிகளில் 13,436 பேருக்கும் என ஆக மொத்தம் 26,508 நபர்களுக்கு விருப்ப படிவம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இறப்பு, முகவரி மாற்றம், இடம் பெயர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் தொடர்பாக 5,155 நபர்களுக்கு விருப்ப படிவம் வழங்க இயவில்லை. விடுபட்டவர்களை கண்டறிந்து விருப்ப படிவம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விருப்ப படிவம் வழங்கப்பட்டவர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப படிவம் பெறப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post திண்டுக்கல் மாவட்டத்தில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள்; 85 வயதுக்கு மேல் 32,594 பேர் உள்ளனர்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Dindigul district ,Dindigul ,Collector ,Poongodi ,Dinakaran ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...