×

திண்டுக்கல்லில் சிலுவை பாதை ஊர்வலம்: ஏராளமானோர் பங்கேற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள புனித வளனார் தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் 6வது வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம் மாலை இயேசு கிறிஸ்துவின் பாடுகள் நிறைந்த சிலுவை பாதை ஊர்வலம் நடைபெற்றது. இதில் இயேசு கிறிஸ்து, மாதா, யூதர்கள், இறை சாட்சிகள் வேடமணிந்து தத்துரூபமாக நடித்தனர்.

புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவங்கிய ஊர்வலம் தலைமை தபால் அலுவலகம், பஸ் நிலையம், காமராஜர் சிலை வழியாக புனித வளனார் பேராலயத்தை வந்தடைந்தது. வழிநெடுகிலும் ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டு இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைத்து ஜெபம் செய்தனர். பின்னர் தேவாலயத்தில் திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை புனித வளனார் தேவாலய பங்குத்தந்தை மரிய இஞ்ஞாசி மற்றும் உதவி பங்கு தந்தையர்கள், அருட் சகோதர, சகோதரிகள் செய்திருந்தனர்.

The post திண்டுக்கல்லில் சிலுவை பாதை ஊர்வலம்: ஏராளமானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Lent ,Jesus Christ ,St. Valanar Church ,Mata ,Jews ,God ,
× RELATED திண்டுக்கல்லில் சாலைகளில் சுற்றும்...