×

பப்புவா நியூ கினியாவில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8-ஆக பதிவு

மோர்ஸ்பி: பப்புவா நியூ கினியாவில் நள்ளிரவு 1.52 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 95 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8-ஆக பதிவானது.

உலகின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் நள்ளிரவு 1.52 மணியளவில் பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பெருங்கடலோர பகுதிக்குட்பட்ட நிலநடுக்கம் அதிகம் ஏற்பட கூடிய இடத்தில் பப்புவா நியூ கினியா அமைந்துள்ளது. நள்ளிரவு 1.52 மணியளவில் கிழக்கு-வடகிழக்கே 32 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்தவித உயிர் பாதிப்பும் பொருட் சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பப்புவா நியூ கினியாவில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பப்புவா கினியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியிருந்தது. இதனால் 7 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பப்புவா நியூ கினியாவில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8-ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : Papua New Guinea ,Morsby ,Dinakaran ,
× RELATED பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்