×

மாஸ்கோவில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் 133 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிப்பு!

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் 133 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பாக இதுவரை 11 பேரை ரஷ்ய பாதுகாப்புப்படை கைது செய்துள்ளது.

ரஷ்யாவில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் வெற்றி பெற்றார். 200 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தொடர்ச்சியாக 3வது முறையாக அதிபராகி சாதனையை முறியடித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாஸ்கோவின் மேற்குப் பகுதியில் உள்ள க்ரோகஸ் நகரின் மையத்தில் உள்ள 6200 பேர் அமரக்கூடிய பிரம்மாண்ட இசையரங்கில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது. சம்பவத்தின் போது அங்கு ரஷ்ய பேண்ட் இசைக் குழுவான ‘பிக்னிக்’ குழுவின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென துப்பாக்கிக் குண்டுகள் பாய பலர் சரிந்து விழுந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியது மட்டுமல்லாது அரங்குக்கு பயங்கரவாதிகள் தீவைத்தும் சென்றனர். இந்நிலையில் தீவிரவாதிகள் தாக்குதலில் 133 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பாக இதுவரை 11 பேரை ரஷ்ய பாதுகாப்புப்படை கைது செய்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர்களுக்கு உக்ரைனில் சில தொடர்புகள் இருந்துள்ளதாகவும், அவர்கள் ரஷியாவின் எல்லையை கடந்து உக்ரைனுக்குள் தப்பிச் செல்ல முயன்றதாகவும் ரஷ்ய புலனாய்வு அமைப்புகள் தகவல் கிடைத்துள்ளது.

The post மாஸ்கோவில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் 133 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Moscow ,security ,Vladimir Putin ,Russia ,Dinakaran ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...