×
Saravana Stores

கார் ஓட்டுநர் பலியான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தலைமை காவலர் ஜாமினில் விடுதலை

சென்னை: சென்னை மதுரவாயல் அருகே கார் ஓட்டுநர் பலியான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தலைமை காவலர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். தலைமை காவலர் ரிஸ்வான் தாக்கியதால் கார் ஓட்டுநர் ராஜ்குமார் இறந்தது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மார்ச் 21 இரவு கார் ஓட்டுநர் ராஜ்குமாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தலைமைக் காவலர் தாக்கியுள்ளார். கைது செய்யப்பட்ட மதுரவாயல் காவல் நிலைய தலைமை காவலர் ரிஸ்வானுக்கு பூவிருந்தவல்லி நீதிமன்றம் ஜாமின் அளித்தது.

The post கார் ஓட்டுநர் பலியான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தலைமை காவலர் ஜாமினில் விடுதலை appeared first on Dinakaran.

Tags : Chief guard ,Chennai ,Madurawal, Chennai ,Rajkumar ,Rizwan ,Dinakaran ,
× RELATED சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டது