×

கமுதி அருகே வேளாண் கல்லூரியில் உலக நீர் தினம்

கமுதி, மார்ச் 24: கமுதி அருகே பேரையூரில் உள்ள நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் உலக வன தினம், நீர் தினம் மற்றும் உலக வானிலை தினங்களை ஒருங்கிணைத்து முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வந்த அனைவரையும் உதவி பேராசிரியர் நவீன் வரவேற்று பேசினார். கல்லூரியின் தலைவர் அகமதுயாசின் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக பரமக்குடி வனச்சரக அலுவலர் நாகராஜன், பரமக்குடி வனவர் கேசவ மூர்த்தி, ராமநாதபுரம் வனவர் அமுதரசு ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வனப் பாதுகாப்பின் முக்கியத் துவத்தை பற்றி எடுத்துரைத்தனர். வனச்சரக அலுவலர், மத்திய அரசின் ஒரு மாணவர் ஒரு மரம் என்ற திட்டத்தின் கீழ் மாணவர்கள் அனைவரையும் மரங்களை நட்டு பாதுகாக்க வலியுறுத்தினார்.

பின்னர் இவ்விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர்கள் வழங்கினர். விழாவின் நிறைவாக சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் திருவேணி நன்றியுரை வழங்கினார்.

The post கமுதி அருகே வேளாண் கல்லூரியில் உலக நீர் தினம் appeared first on Dinakaran.

Tags : World Water Day ,Agriculture College ,Kamudi ,Nammalwar College of Agriculture and Technology ,Beraiyur ,World Forest Day ,Water Day ,World Meteorological Day ,Dinakaran ,
× RELATED பூச்சி மேலாண்மை குறித்து வேளாண்...