- வள்ளாடிகர் கோயில் ஊர்வலம்
- மேலூர்
- பங்குனி திருவிழா ஊர்வலம்
- அம்பலகரன்பட்டி
- வள்ளாடிகாரர் கோயில்
- வள்ளாடிகார் கோயில்
- பங்கூனி
- தின மலர்
மேலூர், மார்ச் 24: மேலூர் அருகே அம்பலகாரன்பட்டி வல்லடிகாரர் கோயிலின் பங்குனி திருவிழா தேரோட்டம் பக்தர்கள் வெள்ளத்தில் நேற்று நடைபெற்றது. மேலூர் அருகே அம்பலகாரன்பட்டியில் உள்ளது வல்லடிகாரர்கோயில். இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் 3 நாள் திருவிழா சிறப்பாக நடைபெறும். முதல் நாளில் மஞ்சுவிரட்டுடன் துவங்கும். இதனை தொடர்ந்து வல்லடிகாரர், அம்பாளுக்கு பாலாபிஷேகம், திருக்கல்யாணம், ஊர்வலம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக திருவிழாவின் மூன்றாவது நாளான நேற்று, தேரோட்டம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். இதன்படி கோயிலின் நான்கு ரத வீதிகளிலும் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இத்தேரில் வல்லடிகாரர், பூரணி மற்றும் பொற்கலை அம்மன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
The post மேலூர் அருகே வல்லடிகாரர் கோயில் தேரோட்டம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு appeared first on Dinakaran.