×

100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நகராட்சி அலுவலக வளாகத்தில் கோலப்போட்டி

 

திருவள்ளூர், மார்ச் 24: வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்கவும், 100 சதவிகித வாக்கை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான த.பிரபு சங்கர் உத்தரவின் பேரில் திருவள்ளூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய கோலப்போட்டி நடைபெற்றது.

மகளிர் குழுக்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு போட்டி போட்டுக்கொண்டு கோலங்களை வளைத்தனர். இவர்கள் வரைந்த கோலங்களை மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், நகராட்சி ஆணையர் த.வ.சுபாஷினி ஆகியோர் பார்வையிட்டு சிறந்த கோலமிட்ட மகளிர் குழுக்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இதில் சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ், பொறியாளர் நடராஜன், வருவாய் அலுவலர் கருமாரியப்பன், நகர அமைப்பு ஆய்வாளர் குணசேகரன் உட்பட நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.

The post 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நகராட்சி அலுவலக வளாகத்தில் கோலப்போட்டி appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Election Commission of India ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தல்...