×

இந்தியாவின் உதவியுடன் பூடானில் நவீன மருத்துவமனை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

திம்பு: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் பூடான் புறப்பட்டு சென்றார். அங்கு பிரதமருக்கு பூடான் அரசின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் ஷேரிங் டோக்கே மற்றும் மன்னர் ஜிக்மே கேசர் நம்கெல் வாங்சுவை ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடினார். தொடர்ந்து பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து இந்தியாவின் நிதியுதவியுடன் திம்புவில் அமைக்கப்பட்ட தாய் சேய் நல மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது இந்த விழாவில் அந்நாட்டின் பிரதமர் ஷேரிங் டோக்கேவுடன் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்றார். தொடர்ந்து மருத்துவமனையை இரு நாட்டு பிரதமர்களும் திறந்து வைத்தனர். 150 படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

The post இந்தியாவின் உதவியுடன் பூடானில் நவீன மருத்துவமனை: பிரதமர் மோடி திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : PM ,Modi ,Bhutan ,Government of Bhutan ,Sharing Tokke ,King Jigme Kesar Namkel ,India ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து...