×

தக்ஷின் பாரத் ஹிந்தி பரிச்சர் சபா தேர்வில் ட்ரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

செங்கோட்டை, மார்ச் 24: ஒன்றிய அரசால் ஒவ்வொரு ஆண்டும் தக்ஷின் பாரத் ஹிந்தி பரிச்சர் சபா மூலம் இந்தி தேர்வு மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்காக செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி இந்தி ஆசிரியை இந்துஜா மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் தக்ஷின் பாரத் ஹிந்தி பரிச்சர் சபா மூலம் இந்தி தேர்வு சமீபத்தில் நடந்தது. இதில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி சார்பில் பங்கேற்ற மாணவர்கள் 9 பேர் , 95 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றனர். தேசிய அளவில் இந்தி தேர்வில் சாதனை படைத்த மாணவ- மாணவிகளை பள்ளியின் தாளாளர் சேக் செய்யது அலி, முதல்வர் சமீமா பர்வீன் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.

The post தக்ஷின் பாரத் ஹிந்தி பரிச்சர் சபா தேர்வில் ட்ரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் appeared first on Dinakaran.

Tags : Treasure Island School ,Sengotta ,Dakshin Bharat ,Union Govt ,Treasure Island International School ,Induja ,Dakshin ,
× RELATED சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் ட்ரஷர் ஐலண்ட் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி