- தேர்தல் நிர்வாகக் குழு
- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி
- எஸ். எச். கே. நவாஸ்
- சென்னை
- வழக்கறிஞர்
- எஸ். கே. நவாஸ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முதன்மைத் தேர்தல்
- தின மலர்
சென்னை:தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின், தலைமை தேர்தல் நிர்வாக குழு உறுப்பினராக வழக்கறிஞர் எஸ்.கே.நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகளை தமிழக காங்கிரஸ் கட்சி தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, வார் ரூம் அமைப்பது, தேர்தல் பிரசார பணிகளை ஒருங்கிணைப்பது, நிதி ஆதாரங்களை திரட்டுவது என பல்வேறு கட்ட தேர்தல் பணிகளுக்கு, அகில இந்திய காங்கிரஸ் தலைமை பல்வேறு குழுக்களை அமைத்து வருகிறது. அவர்கள் தலைமையில் தேர்தல் பணிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு தேர்தல் பணிகளை வேகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, காங்கிரஸ் கட்சியின் தலைமை தேர்தல் நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமாரும், ஒருங்கிணைப்பாளராக ரூபி மனோகரன் எம்எல்ஏவும் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த குழுவின் உறுப்பினராக வழக்கறிஞர் எஸ்.கே.நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பிறப்பித்துள்ளார்.எஸ்.கே.நவாஸ், தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராகவும், காங்கிரஸ் கட்சியின் சட்டத்துறை இணை செயலாளராகவும் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
The post தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை தேர்தல் நிர்வாக குழு உறுப்பினராக எஸ்.கே.நவாஸ் நியமனம் appeared first on Dinakaran.