×

மக்களவைத் தேர்தலில் அதிமுக வென்றால் தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி


சேலம்: பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம், தே.மு.தி.க. எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம், தே.மு.தி.க. எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இதில் அ.தி.மு.க. 33 இடங்களில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. 5 தொகுதிகளிலும், புதிய தமிழகம் தென்காசியிலும், எஸ்.டி.பி.ஐ. கட்சி திண்டுக்கல் தொகுதியிலும் போட்டியிடுகிறது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

இதே போல் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். திருச்சியில் நாளை (24-ந்தேதி) அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் 40 பேரை ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தி பிரசாரம் செய்கிறார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக வென்றால் தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும். கூட்டணியை நம்பி அதிமுக இல்லை. வந்தால் வரவேற்போம். இல்லாவிட்டால் தனித்து நிற்போம். சொந்த பலத்தில் தேர்தல் களம் காண்போம். சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.

ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியை ஆதரிப்பதுதான் பாமக என்று எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். ராமதாஸ் பாஜகவுக்கு பூஜ்யம் மதிப்பெண் தருவதாக கூறிவிட்டு, இப்போது அங்கேயே கூட்டணி வைத்துள்ளார். வேடந்தாங்கல் பறவை போல பாமக அடிக்கடி கூட்டணி மாறுகிறது. வேடந்தாங்கல் பறவை மாதிரி அடிக்கடி கூட்டணி மாறுகிறவர் அன்புமணி ராமதாஸ். வேடந்தாங்கல் பறவைகள், ஏரியில் தண்ணீர் நிரம்பி இருக்கும்போது வரும். தண்ணீர் வற்றினால் போயிடும். அது மாதிரிதான் அவர்”

 

The post மக்களவைத் தேர்தலில் அதிமுக வென்றால் தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Lok Sabha ,Edappadi Palanisami ,Salem ,A. Thu. M. K. ,New Tamil Nadu ,Te. M. Thu. K. S. D. B. I. ,Tamil ,Nadu ,Lok Election ,
× RELATED கேரளா, கர்நாடக மாநிலங்களில் மக்களவை...