×

மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளர் போட்டியிட மறுப்பு

அகமதாபாத் : மக்களவை தேர்தலில் குஜராத் பாஜக வேட்பாளரான பிகாஜி தாகூர் போட்டியிய மறுத்து விலகுவதாக அறிவித்துள்ளார். சபர்கந்தா தொகுதியில் பாஜக வேட்பாளராக பிகாஜி தாகூர் அறிவிக்கப்பட்டிருந்தார். திடீரென போட்டியில் இருந்து தான் விலகுவதாக பாஜக வேட்பாளர் பிகாஜி தாகூர் அறிவித்ததால் அக்கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வதோதரா பாஜக வேட்பாளர் ரஞ்சன்பென் தனஞ்ஜெய் பட் விலகுவதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

The post மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளர் போட்டியிட மறுப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Lok Sabha elections ,Ahmedabad ,Gujarat ,Bigaji Tagore ,Lok Sabha ,Bikaji Tagore ,Sabarkantha ,
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி மக்களை...