×

விசாரணை அமைப்புகள் மூலம் நிறுவனங்களை மிரட்டி பாஜக நன்கொடை வசூல் செய்துள்ளது: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

டெல்லி: விசாரணை அமைப்புகள் மூலம் நிறுவனங்களை மிரட்டி பாஜக நன்கொடை வசூல் செய்துள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளன. மேலும், உச்சநீதிமன்றத்தில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாத் பூஷன் இந்த விவரங்களை வெளியிட்டார்.

ரெய்டு நடத்தி 41 நிறுவனங்களிடம் ரூ.2471 கோடி வசூல்

அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ரெய்டில் சிக்கிய 41 நிறுவனங்களிடம் ரூ.2,471 கோடி நன்கொடையை பாஜக பெற்றது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை சோதனையை எதிர்கொண்ட 41 நிறுவனங்கள் பாஜகவுக்கு நன்கொடை வழங்கியுள்ளது. ரெய்டு நடந்த 3 மாதத்திலேயே அந்த நிறுவனங்கள் மூலம் பாஜகவுக்கு ரூ.121 கோடி நன்கொடை சென்றது தெரியவந்துள்ளது.

ரெய்டுக்கு பின் பாஜகவுக்கு ரூ.1,698 கோடி நன்கொடை

அமலாக்கத்துறை ரெய்டு நடத்திய பிறகு ரூ.1,698 கோடியை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து பாஜக பெற்றுள்ளது. நன்கொடை வழங்கிய 33 நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசின் 172 ஒப்பந்தங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரூ.1751 கோடிக்கு பதில் ரூ.3.7லட்சம் கோடி ஒப்பந்தம்

பாஜக பெற்ற ரூ.1,751 கோடி தேர்தல் பத்திர நன்கொடைக்கு பதில் ஒன்றிய அரசு ரூ.3.7 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளது. விசாரணை அமைப்புகள் மூலம் நிறுவனங்களை மிரட்டி பாஜக நன்கொடை வசூல் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளன.

The post விசாரணை அமைப்புகள் மூலம் நிறுவனங்களை மிரட்டி பாஜக நன்கொடை வசூல் செய்துள்ளது: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,Delhi ,Prasad Bhushan ,Supreme Court ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக கையெழுத்து பிரசாரம்