×

புதுச்சேரியில் பரபரப்பு பறக்கும்படை சோதனையில் ₹3.5 கோடி பணம் சிக்கியது

*அதிகாரிகள் தீவிர விசாரணை

புதுச்சேரி : புதுச்சேரி கோரிமேட்டில் பறக்கும்படை சோதனையில் ரூ.3.5 கோடி பணம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதுச்சேரி எல்லை பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து, போலீசாருடன் இணைந்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பணம், பரிசு பொருட்கள் கடத்தி வரப்படுகிறதா? என 24 மணி நேரமும் இச்சோதனையை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் கோரிமேடு எல்லையில் உள்ள சோதனைச்சாவடியில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி யஷ்வந்தையா தலைமையில் தேர்தல் துறை பறக்கும் படையினரும், போலீசாரும் அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மிஷின்களில் பணம் நிரப்புவதற்காக வந்த தனியார் நிறுவனத்தின் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். கணக்கில் வராத பணம் இருக்கிறதா? என பறக்கும் படையினர் விசாரித்தனர்.

அப்போது அவர்கள் வைத்திருந்த பணம் மற்றும் எடுத்ததற்கான ரசீதில் 21-1-2024 என தேதி குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள், வாகனம் மற்றும் வாகனத்தில் இருந்த 2 நபர்களையும் புதுச்சேரியில் உள்ள கணக்கு மற்றும் கருவூலக அலுவலகத்துக்கு கொண்டு வந்து, பணத்தை எண்ணி பார்த்தனர். அதில் ரூ.3.47 கோடி இருந்தது. ஏற்கனவே, 98 லட்சத்தை ஏடிஎம் மிஷின்களில் நிரப்பி விட்டதாகவும், ஒரு கோடி வங்கியில் இருப்பதாகவும் வாகனத்தில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.

அதன்படி, ரூ.5.5 கோடிக்கு மேல் வருகிறது. ஆனால் அதற்கான ஆவணங்கள் சரிவர இல்லை. இதையடுத்து ரூ.3.5 கோடி பணத்தை கைப்பற்றினர். இந்த பணத்தை வருமான வரித்துறையினரிடம் இன்று ஒப்படைக்க இருப்பதாகவும், மேற்கொண்டு அவர்கள் இதுபற்றி விசாரிப்பார்கள் எனவும் அதிகாரிகள் கூறினர். புதுச்சேரியில் பறக்கும்படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.3.5 கோடி பணம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post புதுச்சேரியில் பரபரப்பு பறக்கும்படை சோதனையில் ₹3.5 கோடி பணம் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Puducherry Korimate ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு