- பாலக்காடு
- பாலக்காடு மாவட்டம்
- சித்தூர் தாலுக்கா மூலத்தரை
- தட்டமங்கலம்
- பலதுள்ளி
- கொடும்பு
- யகராய்
- தின மலர்
பாலக்காடு : கோடை வெயில் கொளுத்துவதால் பாலக்காடு மாவட்டத்தில் வெயிலின் வெப்பம் காரணமாக ஆறுகளிலும், குளம், குட்டைகளிலும், ஏரிகளிலும் தண்ணீரில்லாமல் வறட்சி அதிகரித்துள்ளது. பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகா மூலத்தரை,தத்தமங்கலம், பாலத்துள்ளி, கொடும்பு, யாக்கரை ஆகிய இடங்களிலுள்ள ஆறுகளில் கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக தண்ணீரில்லாமல் நீரோடைகள் போன்று உருமாறி உள்ளது.
ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு அணைகளில் மட்டுமே தண்ணீர் தேக்கம் மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் ஆற்றிலிருந்து சேகரிக்க கூடிய தண்ணீர் சுத்திகரிப்பு மையங்களில் சுத்திகரித்து குடிநீர் சப்ளை செய்தவாறு உள்ளனர். அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டன.பாலக்காடு மாவட்டத்திலுள்ள மலம்புழா, காஞ்ஞிரப்புழா, சிறுவாணி, போத்துண்டி, சுள்ளியாறு, மீன்கரை, வாளையார் ஆகிய அணைகளில் நீர்மட்டம் சரிந்துள்ளது. பாலக்காடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் மலம்புழா அணையின் நீர்மட்டமும் சரிந்து வருவதால் ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்கள் குடிநீர் பற்றாக்குறைவு ஏற்படும் அபாய நிலை உள்ளது. இதனால் மக்கள் அதிக விலை கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
கேரள – தமிழக எல்லையோர கிராமங்களான வேலந்தாவளம், மேனன்பாறை, கோழிப்பாறை,கொழிஞ்சாம்பாறை, நடுப்புணி, எருத்தியாம்பதி, வண்ணாமடை, மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம், செம்ணாம்பதி மற்றும் கொல்லங்கோடு, எலவஞ்சேரி ஆகிய இடங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க லாரிகள் மூலமாக தண்ணீர் சப்ளை செய்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
The post கோடை வறட்சி எதிரொலி: ஆறுகள், அணைகள் வற்றின appeared first on Dinakaran.