×

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கன்னியாகுமரி கடற்கரையில் புதிய செல்பி பாயின்ட்

கன்னியாகுமரி : சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். காலையில் சூரிய உதயம், மாலையில் அஸ்தமனத்தை பார்த்து ரசிப்பதோடு, கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்வையிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்படுகின்றன.

தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் மக்கள் கூடும் இடங்களில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் கன்னியாகுமரி கடற்கரையில் திரிவேணி சங்கமம் பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செல்பி பாயின்ட் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் பாபு தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜ்குமார், அஜிதா, ஒன்றிய பொறியாளர் ரெஜின், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்த விஜயன், முத்துராஜ், சந்திரன், ஊராட்சி செயலர் காளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நேற்று காலை முதலே சூரிய உதயத்தை காண வந்திருந்த சுற்றுலா பயணிகள் பலரும் ஆர்வத்துடன் இந்த செல்பி பாயின்டில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

The post 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கன்னியாகுமரி கடற்கரையில் புதிய செல்பி பாயின்ட் appeared first on Dinakaran.

Tags : New Selfie Point ,Kanyakumari Beach ,Kanyakumari ,Tamil Nadu ,
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...