ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரியும் படகுகளை மீட்கக் கோரியும் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. மீனவர்கள் வேலைநிறுத்தம் காரணமாக 800-கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்காதபட்சத்தில் ஏப்ரல்-8ல் வாக்காளர் அட்டை, ஆதார் அட்டைகளை ஒப்படைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஒன்றிய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிடில் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
The post இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் appeared first on Dinakaran.