×

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்: இந்திய பிரதமர் மோடி கண்டனம்

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கிரோகஸ் சிட்டி அரங்கில் நேற்றிரவு மர்ம நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் உயிரிழந்தனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கிரோகஸ் சிட்டி அரங்கில் இந்த நேற்று இரவு பிரபல பிகினிக் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை பிரியர்கள் கலந்து கொண்டனர்.

இசை நிகழ்ச்சியில் மர்ம நபர்களால் பொதுமக்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகள் வீசப்பட்டும், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டும் தாக்குதல் அரங்கேறியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்தனர மற்றும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்த அரங்கு முழுவதும் தீப்பற்றி எரிந்து நாசமானது.

தாக்குதல் சம்பவத்தை அறிந்த போலீசார், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார்? எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் நடந்த தேர்தலில் புதின் வெற்றிபெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் ரஷ்யாவில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* ரஷ்யாவில் நடந்த தாக்குதலுக்கு இந்திய பிரதமர் மோடி கண்டனம்
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிசித்துள்ளார். ‘மாஸ்கோவில் நடந்த கொடூரமான தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்; இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய அரசாங்கத்துடனும், ரஷ்ய மக்களுடனும் இந்தியா உறுதுணையாக நிற்கிறது என பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் அளித்துள்ளார்.

The post ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்: இந்திய பிரதமர் மோடி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Moscow ,Modi ,Grogas City Arena ,Crocus City Arena ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...