×

கோவில்பட்டி அருகே ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற ₹6 லட்சம் பறிமுதல்

கோவில்பட்டி, மார்ச் 23: கோவில்பட்டி அருகே முறையான ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற ₹6 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் அழகுராம் தலைமையிலான பறக்கும் படையினர் ஊத்துப்பட்டியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கோவில்பட்டியில் இருந்து கடம்பூர் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ₹6 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நடந்த விசாரணையில் காரில் வந்தவர் விருதுநகர் பாத்திமாநகரை சேர்ந்த மிக்கேல்ராஜ் மகன் விசுவாசம் தியாகராஜன் என்பதும், பஞ்சு வியாபாரியான இவர், கோவில்பட்டியில் உள்ள தனியார் வங்கியில் ₹6 லட்சம் எடுத்துக்கொண்டு கடம்பூரில் உள்ள விவசாயிகளிடம் பருத்தி கொள்முதல் செய்ய செல்வதாக கூறினார். ஆனால் அதற்கான ஆவணங்கள் எதையும் அவர் பறக்கும் படை அதிகாரியிடம் காட்டவில்லை.

இதைத்தொடர்ந்து பறக்கும் படையினர் ₹6 லட்சத்தை பறிமுதல் செய்து தேர்தல் பிரிவு துணை தாசில்தார் வெள்ளத்துரை, வட்ட வழங்கல் அலுவலர் பாண்டித்துரை ஆகியோர் முன்னிலையில் கோவில்பட்டி தாசில்தார் சரவணபெருமாளிடம் ஒப்படைத்தனர்.

The post கோவில்பட்டி அருகே ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற ₹6 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kovilpatty ,Kovilpatty Assembly Constituency Election Flying Force ,Officer ,Azhaguram ,Kovilpatti ,Dinakaran ,
× RELATED வெறுப்புணர்வை தூண்டும் வகையில்...